Tuesday, March 13, 2018

ஸ்ரீதேவி: இந்திய சினிமாவின் குழந்தைப் பெண்


Image result for sridevi moondram pirai

ஸ்ரீதேவி மறைந்தது மறைந்தது போலவே இல்லை. ஒரு அழகான பக்கத்து வீட்டுப் பெண் தன் வீட்டுக்கு சென்று கதவை சாத்திக் கொண்டது போல இருக்கிறதுஎன ஒரு ஸ்ரீதேவி ரசிகர் என்னிடம் சொன்னார். நான் கவனித்த வரையில் பல ரசிகர்களின் மனநிலையும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு பக்கம் மனம் உடைந்தாலும் இன்னொரு பக்கம் இது ஒரு பொய் செய்தி என நினைக்கிறார்கள். ஒரு நடிகர் வயதாகி நம் கண்முன்னே உருமாறி சட்டென மறையும் போது அவரைப் பற்றி நினைவில் மீட்டி சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கிறது. நடிப்பு வாழ்வின் உச்சத்தில் ஒருவர் சட்டென மாய்ந்தால் அப்போது நம்மால அரற்றி அழ முடியும். ஆனால் ஸ்ரீதேவியோ இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக உருவாகி நீண்ட காலம் அரியணையை அலங்கரித்த பின் தானாகவே அதை விட்டகன்று மனைவியாக தாயாக எளிய வாழ்க்கை வாழ்ந்து ஒருநாள் English Vinglish (2011) எனும் படம் மூலமாக மீண்டும் திரையுலகில் கோலோச்ச திரும்பினார். அவரது திரைவாழ்வின் இந்த இறுதிக் கட்டம் கூட வெகு அட்டகாசமாய் ஆர்ப்பாட்டமாய் பெரும் வெற்றியாய் அமைய இதை இறுதி கட்டம் என நினைக்கவே நமக்குத் தோன்றவில்லை.

மற்றொரு கடிதம்!

Writer,
Forget the fore-shadowing. This aint abt gautham menon’s structural skills. For the first time, I find YOU sexist in ur narration !
If Maya had not entered Anbu selvans life, nothing would have happened to poor anbu selvan. Maybe, But…
மாயா அன்பு செல்வனை சந்திக்காமல் போயிருந்தால், இந்நேரம் Guitar வாசித்துக்கொண்டு, பாண்டிக்கு பஸ் பிடித்து போய்,Beach house இல், Solitary aaga பாட்டு பாடி விட்டு, மெட்ராஸ் வந்து தேங்காய் வாங்கி, சமைத்து சாப்பிட்டு, பிள்ளைகளுக்கு கணக்கு பாடம் சொல்லி குடுத்து விட்டு, ஏதோ ஒரு நண்பனுடன் இரவு சினிமா காட்சிக்கு விகல்பமில்லாமல் சென்று இருப்பாள். Alas, நார்மலாக வாழ முடியாமல் இறந்து போயிருக்க மாட்டாள் !

ஒரு கடிதம்

Image result for புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன்

Good Morning Abilash

I am a regular visitor to your website. I think, your review for the movie 'Life of Pi' brought me to your website first time. Since then, I have been reading closely everything you write. I am amazed at your ability to observe advanced & deep psychological facts portrayed in various movies.

I live in California. Like you, at some point, I was also deeply drawn towards Bruce Lee and is still drawn at some level. Since I like the way you treat your subjects so well, I am eager to read your book on Bruce Lee. Can you please guide me to the right place where I can get it? 
 
Thanks & Regards
Renga Rajan

வணக்கம் ரங்கராஜன்
உங்கள் வாசிப்புக்கும் அன்புக்கும் நன்றி. 
புரூஸ் லீ நூலை வாங்குவதற்கான தொடர்பு கண்ணிகளை கீழே தந்துள்ளேன். வாசித்து விட்டு எழுதுங்கள்:Sunday, March 11, 2018

உன்னைக் கொல்லும் முன் சற்றே தயாரிக்கட்டுமா? (2)


 Image result for kaakha kaakha
 Foreshadowing தொழில்நுட்பம் இலக்கிய புனைவிலும்  சினிமாவிலும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாசகன் / பார்வையாளனுக்கு ஒரு முக்கியமான வெளிப்பாட்டை செய்யும் முன் அவனை அதற்கு அவனது ஆழ்மனதில் நுணுக்கமாய் தயாரிப்பதே foreshadowing (கவிதையில் இதை பெரும்பாலும் தொனி மூலம் செய்கிறோம்).
 முதலில் ஒரு சினிமா உதாரணம். ”காக்க காக்க” - தன் காதலியை மீட்க வில்லனைக் கொல்லும் நாயகன், அம்மோதலின் வழி தன் பலவீனங்களை உணரும் (ராமாயணக்) கதை இது. ராமாயணத்தில் சீதை கடத்தப்பட்ட பின்பு தான் ராமனின் பலவீனங்கள் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு அவனது இமேஜ் களங்கப்படுகிறது. வாலியைக் கொன்று அவன் நல்லறத்தை மீறுகிறான். சீதையின் அற ஒழுக்கத்தை கேள்வி கேட்டு அவளை திரும்ப அனுப்பி ஒரு ஆண்மகனாய் மேலும் பலவீனப்படுகிறான். இப்படி களங்கப்பட்ட ராமனாகத் தான் அன்புச்செல்வன் இப்படத்தில் (துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட, முதலிரவு அறையில் இருந்து வெளியே எறியப்பட்டு) முதல் காட்சியில் அறிமுகமாகிறான்.

Saturday, March 10, 2018

லக்கான் பற்றி ஒரு நூல்
கிரைஸ்ட் பல்கலையில் நான் கோட்பாடுகள் கற்பிக்கும் இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் (PS Eng [Psychology, Sociology, English]) கொண்டு வரும் புத்தகம் இது. முக்கியமான பிரஞ்சு உளவியலாளர் லக்கானின் கோட்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஐநூறு வருடங்களில் ஐரோப்பாவில் தோன்றின பல முக்கியமான படைப்பாளிகளை (ஷேக்ஸ்பியர், ஆல்பர்ட் காமு, பாப்லோ நெருடா, ஈ.ஈ கம்மிங்ஸ்) அலசி இருக்கிறார்கள். இந்த சிறிய தொகுப்பு நுட்பமான ஆழமான விவாதங்கள் அடங்கியது.

Friday, March 2, 2018

உன்னைக் கொல்லும் முன் சற்றே தயாரிக்கட்டுமா? (1)

Related image 
குற்றப்புனைவு படங்கள் மற்றும் நாவல்களால் தூண்டப்பட்டு நடந்த குற்றங்கள் பற்றி தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சமீபமாய் இந்தியாவில் நடக்கும் கொலைக்குற்றங்களை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள் குறிப்பாய் சொல்வது என்னவென்றால் குற்றவாளிகள் குற்றத்தை எப்படி சாமர்த்தியமாய் செய்து தப்பிப்பது என்பது பற்றி சினிமாவில் கற்றுக் கொள்கிறார்கள் என்று.
 நான் சமீபத்தைய நாளிதழில் ஒரு செய்தி படித்தேன். ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை அது. இன்போஸிஸில் வேலை பார்த்த பெங்களூரை சேர்ந்த சதீஷ் குமார் குப்தா தன் மனைவி பிரியங்காவை கொன்ற வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். கொலைக்கான காரணம் சற்று அபத்தமானது; அற்பமானது. பிரியங்கா தன் மாமனார் மற்றும் மாமியாரை வெறுத்துள்ளார். அவர்கள் தன் வீட்டுக்கு வரக் கூடாது என கண்டிப்பாய் கணவன் சதீஷுடம் கூறி விட்டார். சதீஷ் தன் பெற்றோரிடம் மிதமிஞ்சிய பாசம் கொண்டவர். அவர்களின் படம் கொண்ட லாக்கெட்டை மாலையில் கோர்த்து அணிபவர் என போலீஸ் தரப்பு கூறுகிறது. இதெல்லாம் ஒரு கொலைக் காரணமா என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இவ்வழக்கில் சுவாரஸ்யம் கொலைக்காரணம் அல்ல, சதீஷ் கொலைக்கு முன்பு தன் மனைவியை தயாரிக்க செய்த காரியங்களே பிரதான சுவாரஸ்யம்!

Thursday, February 22, 2018

பனிமனிதர்கள் - ஆகா ஷாஹித் அலி

Image result for agha shahid ali

என் மூதாதை, இமயத்து பனியினாலான
ஒருவன்,
சமர்கந்தில் இருந்து காஷ்மீருக்கு வந்தான்,
கடல் சமாதிகளில் சேகரித்த தன் குடும்ப சொத்தான
திமிங்கல எலும்புகளை பையில் சுமந்து கொண்டு.

அவன் முதுகெலும்பு
பனிக்கட்டி ஆறுகளில் இருந்து செதுக்கப்பட்டது,
அவன் மூச்சு ஆர்க்டிக் துருவத்திலிருந்து புறப்பட்டது,
ஆகையால் தன்னைத் தழுவும் பெண்களை உறையச் செய்தான்.
அவன் மனைவி கல் போன்ற நீராக உருகினாள்,
அவளது முதுமை
ஒரு தெள்ளிய நீராவியாதல் ஆனது.

Sunday, February 18, 2018

கண்ணாடி வளையல்களின் கனவு - ஆகா ஷாஹித் அலி

Image result for agha shahid ali 
அந்த இலையுதிர் பருவக் காலங்களில்
என் பெற்றோர் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட
மெல்லிய பஞ்சு மெத்தையில் வெதுவெதுப்பாய் உறங்கினர்

என் அம்மாவின் கைகளில்
உறைந்த நதிகளின் அலைகள் போல வளையல்கள்
அன்று இரவில்

பிரார்த்தனைகளுக்குப் பின்
அவள் இறங்கி தன் அறைக்கு செல்கையில்
படிக்கட்டில் பனி உடையும்
பல வருடங்களுக்குப் பின் பனிக்காலத்துள் உடையும்
சன்னமான ஒலியை கேட்டேன்